அபிவிருத்தி திட்ட அமைச்சரானார் அலிஸாஹிர் மெளலானா!
முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சற்றுமுன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றுமுதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அலிஸாஹிர் மெளலானா அண்மையில் ரணில் தரப்புடன் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது