ரூ.300 மில்லியன் இழப்பீடு கோரி கெஹலியவிற்கு எதிராக வழக்குத் தாக்கல்
அரச வைத்தியசாலையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் ‘ப்ரெட்னிசோலோன் அசிடேடீன்’ கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் நிரந்தர பார்வை இழப்புக்கு உள்ளான மூன்று நோயாளிகள், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (20) வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
தமது கண் பார்வை இழப்பு மற்றும் அதனால் தமது உயிருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளின் பொருட்டு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 10 பேரிடமிருந்து ரூ. 300 மில்லியன் கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு, பேராசிரியர். எஸ்.டி. ஜயரத்ன, வைத்தியர். விஜித் குணசேகர, வைத்தியர். அசேல குணவர்தன, வைத்தியர். ரொஹான் எதிரிசிங்க, வைத்தியர். மகேந்திர செனவிரத்ன, சாமீ கெமிஸ்ட் (தனியார்), இந்தியன் ஓ.பி.எல்.எல். ஆகியோரை இந்த வழக்கின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.