“ஹரின்- மனுஷ நியமனம் சட்டங்களை மீறும் செயல்”
முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார
ஆகியோரை ஜனாதிபதி ஆலோசகர்களாக நியமித்தமை தேர்தல் சட்டங்களை மீறும்
செயலாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான
அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தேர்தல் காலத்தில் புதிய நியமனங்களைத் தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், சுற்றறிக்கையை மீறி குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka