சுவையான பருத்திப்பால்

சுவையான பருத்திப்பால்

பாரம்பரிய உணவுகளில் ஒன்றான பருத்திப் பால் எப்படி செய்வதெனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பருத்தி விதை – 2 கப்
  • பச்சரிசி – 1/4 கப்
  • சுக்கு – சிறிய துண்டு
  • வெல்லம் – 1 1/2 கப்
  • தேங்காய் – 1 கப்
  • ஏலக்காய் – 5
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

பருத்திப் பால் செய்வதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்பு பருத்தி விதைகளை நன்றாகக் கழுவி ஊற வைக்க வேண்டும். பச்சரிசியையும் ஊறவைக்க வேண்டும்.

ஊறவைத்த பருத்தி விதைகளை தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஊறவைத்துள்ள பச்சரிசியை அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் பருத்திப் பாலை ஊற்றி கிளற வேண்டும். பின் பச்சரிசியை சேர்த்து கலக்க வேண்டும்.

தற்போது சிறிதளவு உப்பைச் சேர்த்து, கட்டி விழுந்துவிடாமல் கிளற வேண்டும். பருத்திப்பால் கெட்டியாக வரும்போது அதில் வெல்லப் பாகை சேர்க்க வேண்டும்.

பால் நன்றாக கொதித்ததும் அதில் ஏலக்காய், சுக்கை சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாகா தேவையான அளவு தேங்காயைத் துருவி சேர்த்துக் கொள்ளவும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )