ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைப்பாளர்கள் நியமனம் !

ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைப்பாளர்கள் நியமனம் !

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டஅமைப்பாளர்கள் பலருக்கு நேற்று
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.ஹரிசன் மற்றும் டபிள்யூ.பி.ஏகநாயக்க ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடமிருந்து நியமனக் கடிதங்களைப்
பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், காலி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம, ஹம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி. திஸ்ஸகுட்டியாராச்சி மற்றும் தேவக வீரசிங்க
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )