பிரபல நடிகர் அலைன் டெலோன் காலமானார்

பிரபல நடிகர் அலைன் டெலோன் காலமானார்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் அலைன் டெலோன் நேற்று (18) காலமானார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகர் அலைன் டெலோன் கடந்த 1960ஆம் ஆண்டு வெளியான ‘பர்பிள் நூன்’ அதனைத்தொடர்ந்து, 1967ஆம் ஆண்டு வெளியான ‘லே சாமுராய்’ உள்ளிட்ட கிளாசிக் படங்களில் நடித்து உலக புகழ் பெற்றுள்ளார்.

இவ்வாறு ஆரம்பக்கால பிரெஞ்சு சினிமாவின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அலைன் டெலோன் பின்னர் 2019ஆம் ஆண்டு பக்கவாதத்தாலும் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டு இந்த நோயுடன் போராடி வந்த நிலையில் தனது 88ஆவது வயதில் நேற்று தனது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்து, உலகம் முழுவதிலும் உள்ள இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அலைன் டெலோனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ‘சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து உலகைக் கனவு காண வைத்தவர்’ என்று குறிப்பிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )