சுவையான பாகற்காய் சுக்கா
பாகற்காய் சுக்காவை எப்படி செய்வதென்று எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்
- பாகற்காய் – 500 கிராம்
- எண்ணெய் – 4 டீஸ்பூன்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- பூண்டு – 4-5
- கறிவேப்பிலை – 1 கொத்து
- உப்பு – சுவைக்கேற்ப
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- சாம்பார் தூள் – 1 டீஸ்பூன்
- நாட்டு சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பாகற்காயை நறுக்கி, நீரில் போட்டு, அத்துடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் ஊற வைத்துள்ள பாகற்காயை வடிகட்டி சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், சாம்பார் தூள் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் நன்கு சுருண்டு வரும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான பாகற்காய் சுக்கா தயார்.