ரசமலாய் கேக் ரெசிபி
ரசமலாய் பலரும் விரும்பியுண்ணும் ஒரு இனிப்பு வகை. அதிலும் ரசமலாய் கேக் செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்?
ரசமலாய் கேக் எப்படி செய்வதெனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பால் – 1 லீட்டர்
- சீனி – 300 கிராம்
- க்ரீம் – தேவையான அளவு
- கண்டன்ஸ்ட் மில்க் – தேவையான அளவு
- கோதுமை மா அல்லது மைதா மா – 500 கிராம்
- பேக்கிங் பவுடர் – ஒரு கரண்டி
- பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி
- குங்குமப் பூ – தேவையான அளவு
- வினிகர் – ஒரு கரண்டி
- ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
- பாதாம் – தேவையான அளவு
- பிஸ்தா – தேவையான அளவு
- கொழுப்பு நீக்கப்படாத பால் – 200 மில்லி
- எண்ணெய் – ஒரு மூடி
- பட்டர் – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மிதமான சூடாக இருக்கும் பாலை ஊற்றி, அதில் குங்குமப் பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். இப்போது பால் மஞ்சள் நிறமாக மாறியிருக்கும்.
பின் அதில் வினிகர், ரோஸ் வோட்டர், சீனி, எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
கோதுமை மா அல்லது மைதாவை சலித்து அதில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, ஏலக்காய் தூள், ஆகியவற்றை கட்டியில்லாமல் கேக் பதத்துக்கு கலந்துகொள்ள வேண்டும்.
பின் கேக் தட்டில் பட்டர் தடவி அதில் இந்தக் கலவையை ஊற்றிக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து அடிகனமான பாத்திரத்தை உள்ளே வைத்து அதில் ஒரு ஸ்டேண்ட் வைத்து 15 நிமிடங்களுக்கு சூடாக்க வேண்டும்.
பின்னர் கேக் கலவையை உள்ளே வைத்து 45 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேகவிட வேண்டும்.
பின் கேக்கை வெளியில் எடுக்க வேண்டும்.
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் பால், கொழுப்பு நீக்கப்படாத பால், கண்டன்ஸ்ட் மில்க், குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
பின்னர் கேக்கை ஒரு தட்டில் வைத்து அதில் ஏற்கனவே கலந்து வைத்துள்ள பாலை மேலே ஊற்ற வேண்டும்.
தொடர்ந்து கேக் மீது க்ரீம் தடவி பாதாம், பிஸ்தா கலவையை மேலே தூவி அலங்கரிக்க வேண்டும்.
அருமையான ரசமலாய் கேக் ரெடி.