“இந்த நேரத்தில் தான் தேசிய மக்கள் சக்தி நாட்டைக் பொறுப்பேற்க வேண்டும்”

“இந்த நேரத்தில் தான் தேசிய மக்கள் சக்தி நாட்டைக் பொறுப்பேற்க வேண்டும்”

ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியின் பின்னர் உணவு, சுகாதார சேவைகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் , “இப்படி ஒரு நாட்டைக் பொறுப்பேற்க உங்களுக்கு பயமில்லையா? என்று சிலர் எங்களிடம் கேட்கின்றனர். நினைவில் கொள்ளுங்கள், இந்த நேரத்தில்தான் தேசிய மக்கள் சக்தி நாட்டைக் பொறுப்பேற்க வேண்டும்.

நாடு வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து அதை மீட்டெடுக்க வேண்டும். இதை மீட்டெடுக்க முடியும். எங்களின் மின்சாரம் மற்றும் எரிசக்தி திட்டத்தை கடந்த 15ம் திகதி இரவு முன்வைத்தோம். அதன்படி, மிகக் குறுகிய காலத்திற்குள் மூன்றில் ஒரு பங்காக மின் கட்டணம் குறைக்கப்படும்.

அடுத்த உணவு, இந்த அரசு உணவுக்கு VAT அறவிடுகிறது. முதல் பட்ஜெட்டில் இருந்து உணவு மீதான VAT வரியை நீக்குவோம். சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் மீதான VAT வரி நீக்கப்படும் அடுத்து, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்படுள்ள VAT வரியும் நீக்கப்படும். மக்களைக் காக்கவே அரசாங்கம், ஆனால் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் தம்மை பாதுகாக்கவே பார்க்கின்றனர்” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )