கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை : நீதி கிடைக்குமா ?

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை : நீதி கிடைக்குமா ?

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி அதிகாலை கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக்கல்லூரி மருத்துவமனையின் செமினார் அறையில் முதுகலை பயிற்சி மருத்துவராக பணியாற்றிவந்த பெண் மருத்துவரின் உடல் அரைநிர்வாணமாக காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் உயிரிந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், கழுத்து, கால்கள் முறிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும் தெரிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றம் நடந்த 6 மணி நேரத்தில சஞ்சய் ராய் எனும் நபர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், உயிரிழந்த பெண் மருத்துவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த சுபர்னா கோஸ்வாமி,

`பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் 150 மி.லி அளவுக்கு விந்து இருக்கிறது.

ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தால் இந்த அளவுக்கு விந்து இருப்பதற்கு சாத்தியமில்லை.

நிச்சயம் இது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்க வேண்டும்!” எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த விவகாரம் மேற்கு வங்கத்தை உளுக்கியெடுக்க, மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

குறிப்பாக, சம்மந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோரும் உண்மையானக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர்.

அடுத்தடுத்து நீதி விசாரணை கோரி பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன.

இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஹிரன்மே பட்டாச்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இருப்பினும் இந்தப் போராட்டம் மேற்குவங்க மாநிலம் கடந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், சம்பவம் நடந்த ஆர்.ஜி. கர் மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கியதோடு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் தாக்கினர். இந்த சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரை கைது மேற்கு வங்க பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என பா.ஜ.கவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மேலும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருப்பதால் இந்தியா கூட்டணி தலைவர்கள் மௌனம் காப்பதாகவும் பா.ஜ.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால் அதற்கு மாறாக மருத்துவர்கள் போராட்டத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டிவருகின்றனர்.

குறிப்பாக, மேற்குவங்கத்தை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலேயே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.

இத்தனை போராட்டங்கள், அரசியல் குற்றச்சட்டுகள் எல்லாம் கடந்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும், இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )