எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
இலங்கையில் தற்போது எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணரான சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 0.03 எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டாலும், தற்போது அந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது நாடு முழுவதும் சுமார் 3,500 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 50 குழந்தைகளும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
தற்போது கண்டறியப்பட்ட நோயாளிகளில் ஏறக்குறைய 81 சதவீதமானவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதாகவும், எதிர்காலத்தில் இந்தநோய் மேலும் பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் எனவும் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.