தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு முழு ஆதரவு !
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தம் அரசியல் பாரம்பரிய
பழக்கத்தின்படி நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்காது வேறு கட்சியுடன்
இணைந்து கொண்டுள்ள போதிலும் ஜனாதிபதி தலைமையில் நாட்டைகட்டியெழுப்புவதற்கு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதில் தமிழ், முஸ்லிம் மக்கள் உறுதியாக உள்ளனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி, வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாட்டை பொறுப்பெடுக்க எவரும் முன்வராத சூழலில் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி பதவியை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலப்பகுதிக்குள் அந்த வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டெடுத்தார்.
அதனால் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்காக .ல.சு. கட்சி
என்ற வகையில் நாம் அவருக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குகின்றோம்
மலையகப் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவில் இருந்து இங்கு வந்து 200 வருடங்
களான போதிலும் அவர்கள் இந்நாட்டு பிரஜைகள். அவர்களை பெருந்தோட்ட தமிழர்கள் என்றோ, மலையகத் தமிழர்கள் என்றோ பிரிக்க வேண்டிய தேவை இல்லை என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதி கொண்டுள்ளார் ‘என்று பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.