ஊக்கமருந்து விவகாரம் : அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் திக்வெல்ல இடைநிறுத்தம் !

ஊக்கமருந்து விவகாரம் : அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் திக்வெல்ல இடைநிறுத்தம் !

அண்மையில் முடிவுற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அணி வீரர் நிரோஷன்
திக்வெல்ல அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விக்கெட் காப்பாளரான 31 வயது திக்வெல்ல விசாரணைக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையிலேயே காலவரையற்ற தடையை
எதிர்கொண்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது திக்வெல்ல கொக்கெய் போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் உத்தியோகபூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கை அணி சார்பில் இதுவரை 54 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 28 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் நிரோஷன் திக்வெல்ல இந்த ஆண்டின் லங்கா பீரிமியர் லீக் தொடரில் கோல் மார்வல்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டார்.

அவரது அணி எல்.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிவரை முன்னேறிய போதும் ஜப்னா கிங்ஸ் அணியிடம் சம்பியன் கிண்ணத்தை இழந்தது.

எனினும் கடந்த காலங்களிலும் ஒழுக்காற்று விவகாரங்களில் சிக்கி யிருக்கும் திக்வெல்ல அண்மைக்காலமாக இலங்கை அணியில் இடம்பெறத் தவறி வருகிறார்.

அவர் இலங்கை அணிக்காக கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலேயே ஆடியிருந்தார்.

எனினும் அவர் ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை அணிக்காக ஆடி இரண்டு ஆண்டுகள் கடந்திருப்பதோடு டி20 போட்டியில் வாய்ப்புப் பெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )