அடிக்கடி ஏப்பம் வருதா ?
உடலிலுள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வுதான் ஏப்பம். ஏப்பம் விடுவது சாதாரணமானதுதான் என்றாலும் அடிக்கடி ஏப்பம் விடுவது பிரச்சினையை ஏற்படுத்தும்.
எதனால் அடிக்கடி ஏப்பம் வருகிறது?
தொடர்ச்சியாக ஏப்பம் வந்துகொண்டே இருந்தால் வயிற்றில் புண் இருக்கிறது என அர்த்தம்.
உணவை வேக வேகமாக சாப்பிடும்போது அதிக காற்று உள்ளே செல்கிறது. இது ஏப்பத்தை உண்டாக்குகிறது.
எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பது ஏப்பம் வருவதை அதிகப்படுத்தும்.
மன அழுத்தம், சரியான உறக்கமின்மை, மன இறுக்கம் ஆகியவை செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும். இது அடிக்கடி ஏப்பத்தை ஏற்படுத்தும்.
சரியான நேரத்துக்கு உணவு உண்ணாமல் இருந்தால் உணவுக்கான அந்த இடத்தை காற்று நிரப்பிவிடுகிறது. இதனால் அடிக்கடி ஏப்பம் வருகிறது.
ஏப்பத்துடன் வயிறு வலி, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் ஆகியவையும் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.