ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சுப் பணிகள் இன்று ஆரம்பம் !
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சகப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளதால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி
வழங்கப்பட்ட பின்னர் அச்சகப்பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் 39 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வாக்குச்சீட்டை வடிவமைப்பது தொடர்பாக அரசாங்க அச்சகர் கங்கா கல்பனி லியனகே கருத்து தெரிவித்துள்ளார்.
‘ஒரே வாக்குச் சீட்டில் வாக்காளரின் பெயர்களும் அவர்களின்
இலச்சினைகளும் அச்சிட முடியும்
எவ்வாறாயினும் ஒரே வாக்குச்சீட்டில் அச்சிடுவதா? அல்லது இரண்டு வாக்குச்சீட்டுகளாக அச்சிடுவதா? என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு வழங்கும் அறிவுரைகளுக்கமைய, வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படும்.
வேட்பாளர் எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்க அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.