கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கோட்டை , மாகும்புரவுக்கு சொகுசு பஸ்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கோட்டை , மாகும்புரவுக்கு சொகுசு பஸ்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் மற்றும்
மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு புதிய சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

AirPort Terminal Shuttle Service என்ற பெயரில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இது, ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதுவரை இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்குள் போக்குவரத்து சேவை நிறுவனத்தின் வசதிகள் கிடைக்காமையால் விமான நிலையத்திலிருந்து சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள எவரிவத்தை பஸ் நிலையத்துக்கு பயணப் பொதிகளுடன் பயணிக்க நேரிடுகிறது.

விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் , போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் தனியார் பஸ் நிறுவனம் இணைந்து இந்த புதிய பஸ் சேவையை ஏற்பாடு செய்துள்ளன.

விமான நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பஸ்கள் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையூடாக இடையில் நிறுத்தப்படாமல் தமது இலக்கை சென்றடையும் வகையில் இந்த பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய பஸ் சேவைக்காக, 10 பெரிய அளவிலான சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, மேலும் பயணி ஒருவரிடமிருந்து பயணத்துக்கு 3,000 ரூபாய் கட்டணமும் அறவிடப்படும்.

நேற்றுக்காலை (15) 11.45 மணியளவில் இந்த புதிய பஸ் சேவையின் முதலாவது பயணம் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் இருந்து மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு புறப்பட்டது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, பாரிய கொழும்பு போக்குவரத்து வலையமைப்பு மேம்பாட்டு திட்ட பணிப்பாளர் நாலக திஸாநாயக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திருமதி நவோமி ஜயவர்தன, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஜி.எஸ்.விதானகே மற்றும் வரையறுக்கப்பட்ட.

விமான நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கட்டிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )