எங்கள் வரலாற்று குப்பை தொட்டியின் கடைசி குப்பை வேலுகுமார்
தமிழ் முற்போக்கு கூட்டணியின்யின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இன்று (15) தீர்மானித்தார்.
இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், “ எங்கள் வரலாற்று குப்பை தொட்டியின் கடைசி குப்பை வேலுகுமார்“ என தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையே ஆதரிக்க தீர்மானித்துள்ள நிலையிலேயே மேற்கண்டவாறு அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka