
சுகாதார சேவையில் சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சர் விளக்கம்
ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்குக் கொண்டு செல்ல உயர்ந்த சம்பளம் மற்றும் சுகாதார சேவையில் சம்பளம் அதிகரிக்கப்படும் முறை தொடர்பாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (24) பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
சம்பள அதிகரிப்பு தொடர்பாக வெளியிடப்படும் தவறான எண்ணங்களுக்கு விளக்கம் அளிப்பதே தமது நோக்கம் என தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்;
சிலரின் சம்பளம் ஏப்ரல் மாதத்தில் குறைக்கப்படும் என நளீன் பண்டார பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். ஆனால் 325 பில்லியன் மொத்த சம்பள அதிகரிப்பிற்கு பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் அரசாங்க சேவையின் சம்பள அதிகரிப்பிற்காக மாத்திரம் 110 பில்லியன் ஒதுக்கப்படும். அப்படியாயின் இந்த சம்பள அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும். இந்த நாட்டில் அரச ஊழியர்களுக்கு கடந்த காலங்களில் இந்த அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை.
அரசாங்க ஊழியர்களுக்கு தெரியும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் அது தனது சம்பளத்தில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தும் என்று. அது மேலதிக நேரம் கொடுப்பனவிற்கு, மேலதிக வேலைக்கு, தினசரி கொடுப்பனவிற்கு, வங்கிக் கடன் எடுக்கும் போது, என சகல வெற்றிக்கும் இந்த அடிப்படைச் சம்பளம் அதிகரிப்புக்கு தான் ஏதுவாக அமையும். அதனால் அரசாங்க ஊழியர் அரசு அடிப்படைச் சம்பள அதிகரிப்பை மிகவும் அன்பாகவும் கௌரவமாகவும் வரவேற்றுள்ளார்கள். அவர்களின் அபிப்பிராயங்கள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. அதிகமான அரசாங்க ஊழியர்கள் எம்மிடம் கேட்பது தான் இவ்வாறு ஒன்றையே அதிகரிப்பதற்கான நிதி எங்கிருந்தது? என்பதுதான். அவர்கள் உண்மையாகவே சாதாரண கேள்வி ஒன்றைத் தான் கேட்கிறார்கள். நீங்களும் ஆட்சி செய்தவர்கள் தானே. இந்த நிதி எங்கிருந்தது. ஜனாதிபதி நிதி அமைச்சர் ஆக திரைச்சேறியிலிருந்து நிதி அதிகாரிகளுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு தான் இந்த நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். எனவே யாருடைய சம்பளமும் குறைவதில்லை.
எனவே நான் சுகாதார சேவையில் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தெளிவுபடுத்துகிறேன். இதற்கு முன்னர் ஒன்றை கூற வேண்டும் பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்று காலப்பகுதியில் தவறான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது சுகாதார சேவையுடன் தொடர்புடைய ஊழியர்கள் மிகவும் பாரிய அர்ப்பணிப்புடன் செயல்பட்டு சுகாதாரத் துறையின் இந்த மட்டத்திலாவது பேணி வந்திருக்கிறார்கள். எனவே நாம் அவர்களுக்கு அதற்கான கௌரவத்தையும் மதிப்பையும் வழங்க வேண்டும். அதிக நேர கொடுப்பனவு 120 மணித்தியாளங்கள் வழங்கினாலும், சிலர் அதைவிட அதிக காலம் வேலை செய்தே சுகாதார சேவையை இந்த அளவு வைத்திருக்கிறார்கள். அது போல் தமக்கு உரித்தான சில சலுகைகள் இல்லாமல் போயும் கூட வரிச் சுமை செலுத்தப்பட்ட போதிலும் நாடு பற்றிய நம்பிக்கை இல்லாதிருந்த போதும், எனினும் நாடு ஒரு நாளைக்கு நல்ல நன்றாக வரும், தான் படித்த இடத்திற்கு தான் சேவை வழங்க வேண்டும் என இந்த நாட்டில் தங்கியிருந்த அனைவருக்கும் நாம் விசேட நன்றியை தெரிவிக்க வேண்டும்.
நாட்டை விட்டு சென்றவர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்வது தயவு செய்து நாட்டிற்கு வாருங்கள் நாடு தற்போது நல்ல நிலைக்குத் திரும்பியுள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் அவர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பை உயர்தரத்தில் வழங்கியுள்ளோம். அதில் சில தொடர்பாக தெளிவுபடுத்துகிறேன். உதாரணமாக பராமரித்துவத்துறையில் MT – VI -(III) தரத்தில் 32, 080 ரூபாயாக காணப்பட்ட அடிப்படைச் சம்பளம் 54,120வரை அதிகரிக்கும். அவர்களுக்கு காணப்பட்ட சம்பளம் மொத்தமாக 103,480ரூபாய் கிடைக்கும். இந்த சம்பள அதிகரிப்புடன் நிகர சம்பளம் 132,040 வரை அதிகரிக்கும்.
எனவே அடிப்படைச் சம்பளம் மாத்திரம் 22,040 அதிகரிப்பு காணப்படும். மொத்த சம்பளத்தில் 28,560 மாற்றமடையும். MT – VII – (III) தாதியர்களின் அடிப்படைச் சம்பளம் 32,525 ரூபாய்கள். 54,920 வரை அதிகரிக்கும். தாதியர்களின் மொத்தச் சம்பளம் 104,481 ரூபாய்கள். 133,640 ரூபாய் வரை அதிகரிக்கும். அடிப்படைச் சம்பளம் மாத்திரம் 22,395 அதிகரிப்பதுடன் மொத்த சம்பளம் 29,159 ரூபாவினால் அதிகரிப்பு. இடைத்தரத்தில் தாதியர் சேவையில் சாதாரண தர உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைக்கின்ற சம்பளம் தொடர்பானது.
இச்சேவையில் விசேட தரத்திலான உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் தற்போது காணப்படும் அடிப்படைச் சம்பளம் 51,545, ரூபாய் 56,800 ரூபாய் வரை அதிகரிக்கும். அத்துடன் தாதி விசேட தரத்திலான சேவையின் அடிப்படை சம்பளம் 54,235 ரூபாய் அது 86,800 வரை கூடும். வைத்தியர் சேவைகள் பல காணப்படுகின்றன. அதில் பொதுவாக சாதாரண வைத்தியரின் தற்போது அடிப்படைச் சம்பளம் 54, 290 அந்த தொகை 94,150 அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். அதன்படி தற்போதுள்ள மொத்த சம்பளம் 232, 725 ரூபாய் 277,800 ரூபாய் வரை அதிகரிப்பதுடன் அடிப்படை சம்பளம் 39,860 ஆகக் கூடுவதுடன் மொத்த சம்பளம் 45,075 வரை உயரும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்; இரண்டாவது விடயம் அடிப்படை சம்பளத்துடன் சம்பந்தப்பட்ட மேதிக நேரக் கொடுப்பனவுகள், மேலதிக வேலை, ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இதன் படி அரசாங்கம் ஆரம்பத் தீர்மானமாக அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் திரைச்சேறியில் காணப்படும் நிலைமை என்றவற்றைப் பொறுத்தே இந்த முடிவை எடுத்தது. அத்துடன் இது மூன்று கட்டங்களில் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் அதன் முதலாவது கட்டம் மேற்கொள்ளப்படும்.
2026 ஜனவரியில் இரண்டாம் கட்டம் மற்றும் 2027 ஜனவரியில் மூன்றாவது கட்டமும் இடம்பெறும். இதன் போது 2027 ஜனவரி தான் அடிப்படைச் சம்பளம் அதிகரிப்பு முழுமை அடையும். ஆனால் 2027ஜனவரியில் இடம்பெறவுள்ள சம்பள அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தக் கொடுப்பனவுகள் 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்றும் விபரித்த அமைச்சர்,
அவ்வாறாயின் தாதியர் சேவையில் தற்போது கிடைக்கப்பெறும் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் குறித்தும் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது விளக்கமளித்தார்.