
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்
காங்கேசன்துறை நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் தெரவித்துள்ளது.
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் மோசமான வானிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இன்று முதல் நாளை மறுதினம் வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து வழமைக்குத் திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized