
பூர்வீகக் குடிமக்களுக்கு தேர்தல் இணைய சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு
தேர்தல் இணைய சேவைகள் குறித்து பூர்வீகக் குடிமக்கள் மற்றும் பூர்வீகக்குடி பள்ளி மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு தம்பானை கனிஷ்ட பாடசாலையில் சமீபத்தில் நடைபெற்றது.
தேர்தல் ஆணையகத்தின் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பப் பிரிவும், பதுளை மாவட்ட தேர்தல் அலுவலகமும் இணைந்து தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மற்றும் பூர்வீகக் குடிமக்களின் தலைவர் ஊருவரிகே வன்னிலா அத்தோ ஆகியோர் தலைமையில், இதனை ஏற்பாடு செய்திருந்தன.
அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுடன் பூர்வீகக் குடிமக்கள் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் மொழி வேறுபாடுகள் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள், வாக்காளர் பட்டியல் தகவல்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், தேர்தல் செயல்முறை பற்றிய குறைந்த விழிப்புணர்வு போன்றவற்றுக்கு தேர்தல் ஆணையகம் மேம்படுத்தியுள்ள தேர்தல் இணைய சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு கிடைக்கும்.