
வீழ்ச்சியை சந்தித்த கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (25) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 326.72 புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 1.96% வீழ்ச்சியைப் பதிவு செய்து, இன்று 16,345.01 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 2.3 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.