ரயில் – யானை மோதலை தடுக்க AI தொழில்நுட்பம்

ரயில் – யானை மோதலை தடுக்க AI தொழில்நுட்பம்

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க, AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (24) சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்றது.

அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் உட்பட பல அரச பல்கலைக்கழகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்ப சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இந்த தொழில்நுட்பத்தை விரைவாக நடைமுறைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு பயிற்றுவிப்பதே இந்த கலந்துரையாடலின்  நோக்கமாகும்.

குறித்த  கலந்துரையாடலில் சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவல, வனவிலங்கு பாதுகாப்புத் துறை, ரயில்வே துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களான ரவீந்திர காரியவசம் மற்றும் சமந்த குணசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)