
குவைத் இராச்சியத்தின் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்
குவைத் இராச்சியத்தின் 64 ஆவது சுதந்திர தினம் மற்றும் சுயாதீன நாடாக செயல்பட ஆரம்பித்து 34 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கையிலுள்ள குவைத் தூதரகத்தினால் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச பங்கேற்றார்.
இலங்கைக்கான குவைத் தூதுவர் விடுத்த அழைப்பின் பிரகாரம் இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர், பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உட்பட உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

இலங்கைக்கும் குவைத் இராச்சியத்துக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்த இது பெரும் உறுதுணையாக அமைந்து காணப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளையும், ஒத்துழைப்புகளையும் மேம்படுத்துவதற்கு எதிர்க்கட்சியின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்து காணப்படுகிறது.