ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

மகா சிவராத்திரி முன்னிட்டு ஊவா மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு அதற்கு அடுத்த நாளான எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டப்ளியூ.ரந்தெனியவின் கையொப்பமும் ,25.02.2025 திகதியும் இடப்பட்டு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

நாளை (26) இடம்பெறும் சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் பாடசாலை மாணவர்கள் மறுநாள் பாடசாலைக்கு செல்லும் போது பல்வேறு அசௌகரிங்களுக்கு முகங்கொடுப்பர், இதன்காரணமாக அம்மாணவர்களின் நலன் கருதி ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறைக்கான பதில் பாடசாலையை எதிர்வரும் வாரத்தின் விடுமுறை நாளில் நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இக்கடிதத்தின் பிரதிகள் ஊவா மாகாண சபையின் பிரதான செயலாளர், ஊவா மாகாண ஆளுநரின செயலாளர் மற்றும் ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதேவேளை, வடக்க, கிழக்கிலும் தமிழ் பாடசாலைகளுக்கு 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)