
கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுமண்டல் தொடருந்து வீதிக்கு அருகில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 31 வயதுடைய புளுமண்டல் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
நபர் ஒருவர் கடந்த 18 ஆம் திகதி இரவு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுமண்டல் தொடருந்து வீதிக்கு அண்மித்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.