
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் அதிக வெப்பம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது
நாட்டின் , பல மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் ஏற்படும் நீர் இழப்பை தவிர்க்கும் வகையில் அதிக நீரை பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
அத்துடன் முடிந்தவரை வெயிலில் செல்வதை தவிக்குமாறும் முதியவர்களும் நோயுற்றவர்களும் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஒளி ஆடைகளை அணியுமாறும், கடினமான செயல்களை கட்டுப்படுத்துமாறும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வடமேற்கு, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை மையத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .