
பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் Lord Swire அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று பெப்ரவரி 22ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்களை ஒன்றுசேர்த்தல், எரிசக்தி துறை, கடற்றொழில், மீன்பிடி படகு தயாரிப்பு போன்ற பல துறை சார்ந்த முதலீட்டாளர்களுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது..
2025 ஆம் ஆண்டிற்கான முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கைத்தொழில்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாளர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தொழில் முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உறுப்பினர் Pamela Anne O’ Leary, தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் இலங்கை உறுப்பினர் நிமாலி டி சொய்சா மற்றும் அச்சங்கத்தின் இலங்கைப் பணிப்பாளர் தேஷான் கிறிஸ்டோபர் ஜெயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு