
பதவியை விட்டு விலக தயார்
உக்ரேன்-ரஷ்யா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே, ‘உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சர்வதிகாரிபோல் செயல்படுகிறார். இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார் என ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் ஜெலன்ஸ்கி கூறியதாவது:
உக்ரேனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். உக்ரேனுக்கு நோட்டோ உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்.
ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரேனுக்கு டிரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை.
உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என்றார்.
நோட்டோ நாடுகளுக்கு நேட்டோ படைகள் பாதுகாப்பு தரும். குறிப்பாக நேட்டோ உறுப்பு நாட்டை யாராவது தாக்கினால், பதிலாக அனைத்து நேட்டோ நாடுகளும் ஆதரவாக வரும்.
இது தனக்கான பாதுகாப்பைத் தரும் என உக்ரேன் கருதுகிறது. நோட்டோவில் உக்ரேன் உறுப்பினராக இணைய ரஷ்யா மறுப்பு தெரிவித்ததே போருக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.