
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்த தொடரின் 5-வது லீக் போட்டிநேற்று (23) துபாயில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷகீல் 62 ரன்களும் ரிஸ்வான் 46 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் அக்சர், ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்கள் முடிவில் 244 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
அபாரமாக விளையாடிய கோலி சதம் அடித்து அசத்தினார். ஷ்ரேயாஸ் அரைசதம் அடித்து அவுட்டானார்.
இதன் மூலம் அரையிறுதி செல்வதை கிட்டத்தட்ட இந்திய அணி உறுதி செய்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது.