ஜென்டில்வுமன் படத்தின் டிரெய்லர் வெளியானது

ஜென்டில்வுமன் படத்தின் டிரெய்லர் வெளியானது

கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன்.

இந்த திரைப்படம் சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது.

இப்படம் வரும் மார்ச் 7 ஆம் திகதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரை மலையாள பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான பேசில் ஜோசஃப் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளார்.

திருமணம் ஆன ஹரி கிருஷ்ணன் லாஸ்லியாவுடன் தொடர்பு வைத்துள்ளார். லிஜோமோல் , லாஸ்லியா மற்றும் ஹரி கிருஷ்ணன் இந்த மூவருக்கும் இடையே உள்ள தொடர்பை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)