
காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான இந்திய இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது நேற்று (22) மீண்டும் ஆரம்பமானது.

நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது நேற்று (22) மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.


இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka