
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு !
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் இரண்டு அதிகாரிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சபாநாயகர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அளித்த அறிவிப்பின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய பாதாள உலக நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தனிப்பட்ட ரீதியில் எம்.பி.க்கள் பாதுகாப்பு பெறலாமா வேண்டாமா என்பதை தாமாக முடிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, எம்.பி.க்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் சாதாரண பணிகளுக்கு அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.