
அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் விடுதலை
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் இன்று சனிக்கிழமை (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்றம் வழங்கிய 06 மாத கால சிறைத்தண்டனை முடிவடைந்த பின்னர் இருவரும் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.