
இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்தில் சிக்கி ஒருவர் பலி!
இன்று அதிகாலை பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் தீக்கிரையாகி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது
எம்பிலிபிட்டியவிலிருந்து அனுராதபுரம் ஜேத்தவனராம நோக்கி தலை யாத்திரை மேற்கொண்ட பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எம்பிலிபிட்டியவையைச் சேர்ந்த ஒரு குழு அனுராதபுரத்தில் உள்ள ஜெயத்தவன புனித தலை யாத்திரை மேற்கொண்டிருந்த போது ஜேத்தவனராம அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்குவதற்காக பேருந்து ஆனது நிறுத்தப்பட்டுள்ளது
அப்போது குறித்த பேருந்தானது திடீரென தீப்பற்றி எரிந்ததாகவும் அதில் சிக்குண்ட எம்பிலிபிட்டியவையைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
மேலும் அனுராதபுரம் உடமலுவ போலீசார் மற்றும் நகர சபை தீயணைப்பு குழுவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்
தீப்பற்றி எரிந்த காரணம் இதுவரை தெரியவராத நிலையில் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்