வியாபாரி ஒருவரின் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி அரசுடமையாக்கம்

வியாபாரி ஒருவரின் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி அரசுடமையாக்கம்

அரிசி விற்பனைக்கு இருந்தபோதிலும், அரிசி இல்லை எனக் கூறிய  விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அதிகாரிகள் கடந்த 18ஆம் திகதி இப்பாகமுவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையின் போது இந்த வியாபாரிக்கு எதிராக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, குறித்த வியாபாரிக்கு எதிராக இன்று (21) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது, அந்த வியாபாரி தனது தவறை ஒப்புக்கொண்ட பின்னர், சந்தை மதிப்பில் 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள கீரி சம்பா அரிசியின் 237 பொதிகளை அரசுடைமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கு மேலதிகமாக, 10,000 ரூபா அபராதமும் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)