
இலங்கை தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 19.37 மில்லியன் கிலோ கிராம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
2024 ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஓப்பிடும் போது இந்த முறை தேயிலை ஏற்றுமதி 0.61 மில்லியன் கிலோ கிராமினால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 18.76 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈராக் முன்னிலை வகிக்கின்றது.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஈராக் 3.02 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை இறக்குமதி செய்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன
CATEGORIES Sri Lanka