போப் பிரான்சிஸ் உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது

போப் பிரான்சிஸ் உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திவந்தார். தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே, ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் மருத்துவ நிலையில் முன்னேற்றம் உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மத்தேயு புரூனி கூறுகையில், மருத்துவ ஊழியர்களால் மதிப்பிடப்பட்ட ரத்த பரிசோதனைகள், குறிப்பாக அழற்சி குறியீடுகளில் சிறிது முன்னேற்றத்தை காட்டுகின்றன. மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனித்து வருகிறார் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )