
பிரமிட் மோசடியில் ஈடுபட்ட நபருக்கு வெளிநாட்டு பயண தடை
வெளிநாட்டிலிருந்து இயங்கும் பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை ஊக்குவித்ததாக கூறப்படும் ஒரு நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கமைய கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மலேசியாவில் இருந்து இயங்கும் பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை குறித்த நபர் இலங்கையில் ஊக்குவிப்பதற்கு பங்களித்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டுத் திட்டத்தில் சுமார் 5,000 பேர் வரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் குறித்து மேலதிக விசாரணைக்காகவும், இலங்கையில் இருந்து இந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நபர் வெளிநாடு செல்வதைத் தடை செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாரும் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிவான், நீதிமன்றத்தின் அனுமதியின்றி அந்த நபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து உத்தரவு பிறப்பித்துளார்.