நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை முதல் ஆரம்பம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை முதல் ஆரம்பம்

ஒத்திவைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தமது சேவையைத் தொடர்ந்தும் கப்பல் நிறுவனம் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் நாளை மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )