
கொசுவை பிடித்து தந்தால் சன்மானம்
பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில், பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் பணம் ஈட்டுவதற்காக வேண்டுமென்றே தண்ணீரைத் தேங்கவைத்து கொசுக்களை உற்பத்தி செய்யும் அபாயமும் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிலிப்பைன்சில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகமாகும்.

CATEGORIES World News