
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; காரணம் வெளியானது
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.