
25 இலட்சம் தென்னங்கன்றுகளை பயிரிடும் திட்டம்
நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக தென்னைப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை செயல்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 25 இலட்சம் தென்னங்கன்றுகளை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பமானது.
இதற்கமைய, வடக்கு தென்னை முக்கோணத்தில் சுமார் ஒரு மில்லியன் தென்னங்கன்றுகளை நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னை பயிர்ச்செய்கை சபை குறிப்பிட்டுள்ளது.