
ஜா-எல பகுதியில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி
ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் அல்லது கொலைத் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka