யாழில் மூவர் மீது கொடூரத் தாக்குதல்

யாழில் மூவர் மீது கொடூரத் தாக்குதல்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 19ம் திகதி மாலை மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர், தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வவுனியா பகுதியில் இருந்து வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி,கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது. 

வாகனத்தில் வருகை தந்து தாக்குதல் நடத்திய கும்பல் வானத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 

தாக்குதலில் காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )