
கண்டியை உலக புராதன கேந்திரத் தலமாக மாற்ற திட்டம்
கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
2035 ஆம் ஆண்டாகும் போது பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்தார்.
இப்பாரிய கண்டி நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கண்டி நகரில் சமய, கலாசார, வரலாற்று மற்றும் கலாசார உரிமைகள் பரவலாக உள்வாங்கப்படும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கண்டி மாநகர சபை உட்பட உள்ளூராட்சி நிறுவனங்கள் 15 ஐ மையப்படுத்தியதாக 600 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka