
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தை இன்று முதல் 24 மணி நேரம் திறக்க நடவடிக்கை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 24 மணி நேரமும் திறந்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து பத்தரமுல்ல வரை இரவு நேர இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவையும் இன்று முதல் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TAGS 24 hoursAnanda WijepalaDepartment of Immigration and EmigrationMinistry of Public Security and Parliamentary AffairsSri lankaகுடிவரவு குடியகல்வுத் திணைக்களம்