
ஜெயிலர் 2 படத்தின் வில்லன் இவரா ?
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். அதே கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் 2 படம் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைரலானது.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருவதால் இதன் படப்பிடிப்பு நிறைவடந்த உடன் ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் ‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.
இந் நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்க உள்ள வில்லன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, எஸ்.ஜே. சூர்யா அல்லது செம்பன் வினோத் ஜோஸ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.