முன்னாள் அமைச்சர் பிரியங்கரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், ​​சிலாபம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்கு 494,000 ரூபாவை மாற்றுமாறு அதிகாரசபை அதிகாரிகளைத் தூண்டி “ஊழல்” குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திரகரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரை தலா 500,000 ரூபாய் பெறுமதியுள்ள இரு சரீர பிணையில் விடுவிக்க நீதபதி உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)