
தமிழரசு கட்சியின் புதிய பதில் பொது செயலாளராக எம்.ஏ. சுமந்திரன் நியமனம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச் செயலாளராக முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே, இவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டது.
இதற்கு முன்னர் இப்பதவியியை வகித்த பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாக அப் பதவியை தொடர்ந்து வகிக்க முடியாது என தெரிவித்தார். இந்நிலையிலேயே, நேற்றைய கூட்டத்தில் அவருக்கு பதிலாக அந்தப் பதவிக்கு எம். ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.