
யாழில் காதலர்களின் முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடு! (படங்கள்)
யாழ். வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் தங்களது பெயர்களை எழுதி காதலர் தினத்தை இளைஞர்கள் கொண்டாடியுள்ளனர்.
பெப்பிரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இலங்கையின் பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.
இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதி வீதிகளில் காதலர்கள் தங்களது பெயர்களையும், காதல் வசனங்களையும் பெரிதாக எழுதி வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர் .
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் தங்களது பெயர்களை எழுதியுள்ளமை பல்வேறு தரப்பினரிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வீதிகளை இவ்வாறு அசுத்தப்படுத்தியுள்ள செயற்பாடு முகம் சுழிக்க வைத்துள்ளது


